தமிழ்நாடு

மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...

நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. எய்தனூரில் அடுத்தடுத்து 8 வீடுகளின் சுவர்களில் மாம்பழ சின்னம் தேர்தலுக்காக வரையப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிகாலை 2 மணியளவில், மர்ம கும்பல் ஒன்று மாம்பழ சின்னம் வரையப்பட்டிருந்த ஆறுமுகம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளது. கல் வீடு என்பதால் தீ உடனடியாக அணைந்துள்ளது. தொடர்ந்து சீதாராமன் என்பவர் வீட்டிலும் குண்டு வீசி, காருக்கு தீ வைக்க முயற்சித்துள்ளனர். சத்தம் கேட்டு வந்து பார்ப்பதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 5க்கும் மேற்பட்டவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்