தமிழ்நாடு

பெற்றோரை இழந்து தவிக்கும் 3 குழந்தைகள் : அரசு உதவி செய்யுமா?

மானாமதுரை அருகே தாய், தந்தையை இழந்து தவிக்கும் 3 குழந்தைகளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டையில் வசித்து வந்தவர் பாலமுருகன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் இவரது மனைவி கோமதி கூலி வேலை செய்து தன் 3 பிள்ளைகளை வளர்த்து வந்தார். கபிலரசன், கலையரசன், காவ்யா என 3 சிறுவர்களும் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கோமதி உயிரிழந்த நிலையில் 3 குழந்தைகளும் தனித்து விடப்பட்டனர். இவர்களை வயதான பாட்டி மட்டும் பராமரித்து வரும் நிலையில் போதிய வருமானமின்றி வீட்டு வேலைகளை தாங்களே செய்து வருகின்றனர். உறவினர்கள் யாரும் உதவ முன்வராத நிலையில் இவர்கள் 3 பேருக்கும் அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?