மானாமதுரை ஆகாஷ் மரண விவகாரத்தில் அவரின் நண்பனின் தாய் பரபரப்பு குற்றச்சாட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண விவகாரத்தில், காவல்துறையினர் மீது உயிரிழந்தவரின் நண்பர் குணாவின் தாய் பார்வதி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கைது செய்யப்பட்ட ஆகாஷ் மற்றும் தனது மகன் குணா ஆகியோரின் கண்களைக் கட்டி போலீஸார் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஆகாஷின் மரணத்திற்கு நீதி கேட்டு மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.