தமிழ்நாடு

மதுரை காவலர் குடியிருப்பில் ஆயுதங்களுடன் சுற்றிய நபர் : நடவடிக்கை எடுக்க கோரி சிறை அதிகாரி புகார்

மதுரையில் காவலர் குடியிருப்பு பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
மதுரையில் காவலர் குடியிருப்பு பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு மதுரை மத்திய சிறையில் காவலர்களுக்கும், தண்டனை கைதிகள் பிரகாஷ், இப்ராஹிம் ஆகியோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்ட காவலரை தாக்கும் நோக்கத்துடன், கைதி பிரகாஷின் சகோதரர் கீரிமணி என்பவர், காவலர்கள் குடியிருப்பு பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்துள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை கண்டதும் அவர் தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கீரிமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிறை அலுவலர் ராஜேந்திரன் புகார் மனு அளித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்