ஆவடி அடுத்த மோரை பகுதியைச் சேர்ந்த 31 வயதான சஞ்சய், தனது நண்பருடன் காரில் சென்றபோது, சி.டி.எச். சாலை அருகே வழியை மறித்து நின்ற இளைஞர்களிடம் வழிவிடுமாறு கேட்டுள்ளார்.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, தென்றல் நகர் பிரதான சாலைக்குச் சென்ற சஞ்சயை, 6 பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்து சென்று கத்தியால் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது.
இதில் தலை மற்றும் நெற்றியில் படுகாயமடைந்த சஞ்சய், அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், ஆசிக், பாலா, பாலாஜி, கணேஷ், ராம் மற்றும் விக்னேஷ் ஆகிய 6 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.