Erode Sanitary Workers Issue | தகாத வார்த்தைகளால் பேசி சூப்பர்வைசரை கன்னத்தில் அறைந்த நபர் - தீயாய் பரவும் வீடியோ..
போராட்டத்தில் குதித்த தூய்மை பணியாளர்கள். ஈரோட்டில் தூய்மைப் பணி மேற்பார்வையாளரை தாக்கிய நபரைக் கைது செய்யக் கோரி ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் திடீர் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த காட்சிகளை காண்போம். ஈரோடு மாநகராட்சி 2-வது மண்டலத்தில் தூய்மைப் பணி மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருபவர் ராஜேஷ்குமார். நேற்று மதியம் 8-வது வார்டு பாரதி நகர் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த செபாஸ்டின் என்பவர் அங்கு தூய்மை பணியாளர்களைத் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளதாக தெரிகிறது. இதனைத் தட்டிக்கேட்ட மேற்பார்வையாளர் ராஜேஷ்குமாரின் சட்டையைப் பிடித்துக் கன்னத்தில் அறைந்த செபாஸ்டின், தடுக்க வந்த பெண் தூய்மைப் பணியாளரையும் தாக்க முயன்றுள்ளார். இது குறித்து ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட செபாஸ்டினைக் உடனடியாகக் கைது செய்ய வேண்டும், கொலை மிரட்டல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
#Erode #SanitaryWorkers #SanitaryWorkersProtest #ViralVideo #ThanthiTV