தமிழ்நாடு

காவல் நிலையத்திலேயே தீ வைத்துக் கொண்ட நபர் - மதுரையில் பரபரப்பு

thanthitv

மதுரையில் காவல்துறை மிரட்டுவதாக குற்றச்சாட்டிய 56 வயதுடைய நாராயணன், காவல் நிலைய வளாகத்திலேயே தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட மோதலில் தாக்கப்பட்டதாக புகார் அளித்தும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நாராயணன் குற்றம்சாட்டினார்.

அதே நேரத்தில் எதிர் தரப்பு புகாரின் அடிப்படையில் போலீசார் அவரது மகன்களை ஒப்படைக்க வற்புறுத்தியதாகவும், இல்லை என்றால் கஞ்சா மற்றும் கொலை வழக்கில் சிக்கவைத்துவிடுவோம் என மிரட்டியதாகவும் குமுறியுள்ளார்.

இதனால் மனஅழுத்தத்துக்கு ஆளான நாராயணன் காவல் நிலையத்திலேயே தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார்.

பின்னர் அவரை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்