தமிழ்நாடு

கண்ணில் பட்டவர்களை எல்லாம் இச்சைக்கு அழைத்த காம கொடூரன் - பக்கத்து வீட்டு பெண் செய்த காரியம்

தந்தி டிவி

சங்ககிரி அருகே, பாலியல் இச்சைக்கு அழைத்த முதியவரை ஓடஓட கட்டையால் அடித்து கொலை செய்த வழக்கில், பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்...

சேலம் மாவட்டம் கஸ்தூரிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. நெசவு கூலித் தொழிலாளியான இவர், திருமணமான ஓராண்டில் இருந்து மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். 50 வயதில் தாயுடன் வசித்துவரும் இவர், மதுபோதையில் அடிக்கடி அக்கம் பக்கத்து பெண்களை பாலியல் இச்சைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதேபோல் சம்பவத்தன்று பக்கத்து வீட்டுக்காரரான சண்முகம் என்பவரின் மனைவி கவிதாவை இவர் மதுபோதையில் பாலியல் இச்சைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கவிதா, தனது கணவர் மற்றும் உறவினர்கள் மூன்று பேர் உடன் சேர்ந்து, மாரிமுத்துவை கட்டையால் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளார். இதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்த நிலையில், கவிதா, அவரது கணவர் உட்பட 5 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்