தமிழ்நாடு

ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த சேமிப்பு உண்டியலை திருடிய நபர்...

ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த சேமிப்பு உண்டியலை திருடிச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தந்தி டிவி
சென்னையில் ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த சேமிப்பு உண்டியலை திருடிச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள ஓட்டலில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான சேமிப்பு உண்டியல் ஒன்று டேபிளின் மீது வைக்கப்பட்டிருந்தது. இதனை ஓட்டலுக்கு வந்த இளைஞர் ஒருவர் திருடி தனது பையில் மறைத்து வைத்து எடுத்துச் சென்றார். உண்டியல் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் சிசிடிவி கேமராவை சோதனை செய்த போது தான் இந்த சம்பவம் தெரியவந்தது. இதுதொடர்பாக ஓட்டல் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் உண்டியலை திருடிச்சென்ற நபரை தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்