தமிழ்நாடு

ரயிலில் காணாமல் போன செருப்பு - எப்ஐஆர் பதிவு...

விரைவு ரயிலில் செருப்பு காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் முபாய் திக்கா என்பவர், கேரளா சென்று விட்டு, மங்களூர் விரைவு ரயிலில் சென்னைக்கு திரும்பி வந்துள்ளார். 2ஆம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில், பயணம் செய்த அவர், தனது செருப்பை, கீழ் படுக்கைக்கு அடியில் போட்டு விட்டு, மேல் படுக்கையில் தூங்கியுள்ளார். காலையில், கண் விழித்த அவர், தனது செருப்பை காணாமல் அதிர்ச்சியடைந்தார். ரயில் பெட்டி முழுவதும் தேடிப் பார்த்தும் தனது செருப்பு கிடைக்காததால், சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்ததும், ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். காணாமல் போன தனது செருப்பின் விலை 9 ஆயிரம் ரூபாய் எனவும், அதை கண்டு பிடித்து தருமாறும் அதில் கூறியுள்ளார். புகாரின்பேரில், எப்ஐஆர் பதிவு செய்து, ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை