தமிழ்நாடு

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் - பரபரப்பு

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் - பரபரப்பு

thanthitv

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே, இளைஞர் ஒருவர் செல்போன் டவர் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழஞ்நல்லூரைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர், கையில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு, திலீப் குமார் என்பவரை உடனே கைது செய்ய வேண்டும் என முழக்கமிட்டார். தகவலறிந்து வந்த போலீசார், அவரிடம் ஒலிபெருக்கி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குடும்பத் தகராறு காரணமாக ஏற்கனவே சிறை சென்று வந்த சிலம்பரசன், மனநலம் பாதிக்கப்பட்டு இதுபோன்று தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கீழே இறங்க மறுத்து அடம்பிடித்த சிலம்பரசனிடம், அவரது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை வரவழைத்த போலீசார், மைக் மூலம் உருக்கமாகப் பேச வைத்தனர். தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் அந்த வாலிபரை மீட்கத் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது."

Namakkal Theft Case | துப்பாக்கி முனையில் நடந்த பயங்கரம் - SP பரபரப்பு பிரஸ்மீட்

Flight Blast | புறப்பட்ட வேகத்தில் நடந்த அசம்பாவிதம்.. சட்டென்று வெடித்த விமானப்படை விமானம்

CM Vijay Sangeetha Divorce Case | CM விஜய், சங்கீதா விவாகரத்து வழக்கில் முக்கிய நகர்வு

Erode | Minister Arunraj | ஈரோடு அரசு மருத்துவமனையில்... களத்தில் இறங்கிய அமைச்சர் அருண்ராஜ்

Thiruparankundram | TVK | திருப்பரங்குன்றம் விவகாரம் - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றசாட்டு