சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள பேன்சி கடையில், கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் 26 ஆம் தேதி பேன்சி கடைக்கு வந்த ஒரு ஆண் நான்கு பெண் உள்பட 5 பேர் பொருட்கள் வாங்குவது போல் நடித்து கடை உரிமையாளர் கவனிக்காத நேரத்தில் பணப் பெட்டியில் இருந்த ரூ 13 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.
புகாரின் அடிப்படையில் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மணிகண்டனை கைது செய்தனர்.