தமிழ்நாடு

மம்தாவுக்கு ஷாக் கொடுக்க நினைத்த பாஜக-க்கு ஷாக்.. உச்சநீதிமன்றம் அதிரடி

தந்தி டிவி

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பா.ஜ.க.வின் தேர்தல் விளம்பரத்துக்கு விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் பா.ஜ.க. -வின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான தேர்தல் விளம்பரத்திற்கு தடைகோரி அக்கட்சி தாக்கல் செய்த மனுவை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம்,

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையம் தோல்வியடைந்துள்ளது எனக் கண்டனம் தெரிவித்ததுடன், பா.ஜ.க.வின் விளம்பரத்துக்கும் தடைவிதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க. வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தனி நீதிபதி தீர்ப்பில் தலையிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பாஜகவின் மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிராக அவதூறாக விளம்பரங்கள் பாஜக வெளியிட கொல்கத்தா உயர்நீதிமன்றம் விதித்த தடையில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்