தமிழ்நாடு

மின்சார ரயிலில் ஆண் பயணிகளுக்கு காலை 7.30 முதல் 9 வரை,"மாலை 4 மணி முதல் 7.30 மணி வரை அனுமதி இல்லை"

சென்னை புறநகர் ரயிலில் நாளை முதல் அனைவரும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தந்தி டிவி

சென்னை புறநகர் ரயிலில் நாளை முதல் அனைவரும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து, மின்சார ரயிலில் பயணிகள் பெண்கள், 12 வயது உட்பட்டோர் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 470 ரயில்கள் தயாராக இருக்கின்றன என தெற்கு ரயில்வே கூறியுள்ளது. ஆண் பயணிகள் மட்டும் காலை 7.30 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7.30 மணி வரையும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெற்கு ரயில்வே கட்டுப்பாடு விதித்துள்ளது.மேலும் ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலில் பயணிக்கும் போது பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்