தமிழ்நாடு

மலேசியாவில் பதக்கங்களை வாங்கி குவித்த சேலம் மாணவிகள்

தந்தி டிவி

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் சேலம் மாணவிகள் 29 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். சர்வதேச அளவிலான கராத்தே மற்றும் ஜூடோகா போட்டி மலேசியாவில் நடைபெற்றது. 11 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், சேலத்தை சேர்ந்த 27 மாணவிகள் மற்றும் பெங்களூரை சேர்ந்த 6 மாணவிகள் என 33 பேர் கலந்து கொண்டனர். இதில் சேலம் மாணவிகள் ஒற்றையர் மற்றும் குழு கட் ஆப் பிரிவு போட்டிகளில் பங்கேற்று 29 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என மொத்தமாக 51 பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்நிலையில், சேலம் திரும்பிய மாணவிகள் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை