மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக் கூடாது என்றும், அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதாக கூறினார். நேர்மையான முறையில் பெரும்பான்மையை நிரூபித்து விட்டு, பாஜக ஆட்சி அமைத்திருக்கலாம் என்றும், பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.