தமிழ்நாடு

"இந்தியாவில் உள்ள எந்த நதியுமே சுத்தமாக இல்லை" - "கும்பமேளா புனித நீரைக் குடிக்க மறுத்து விட்டேன்"

தந்தி டிவி

"இந்தியாவில் உள்ள எந்த நதியுமே சுத்தமாக இல்லை".. "மகா கும்பமேளா புனித நீரைக் குடிக்க மறுத்து விட்டேன்" - நவநிர்மாண் சேனை கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே

கங்கை நதியின் தூய்மை குறித்து மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். கட்சி துவங்கி 19 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விழா புனேவில் நடைபெற்றது. அப்போது பேசிய ராஜ் தாக்கரே, கங்கை நதியின் நிலை குறித்து சமூக ஊடகங்களில் பல வீடியோக்களைப் பார்த்ததாகவும் சிலர் ஆற்றில் தங்கள் உடலைத் தேய்த்துக் கழுவுவதைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் உள்ள எந்த நதியுமே சுத்தமாக இல்லை என விமர்சித்த அவர், தன் கட்சியைச் சேர்ந்த தலைவர் பாலா நந்த்கோன்கர் மகா கும்பமேளாவில் இருந்து புனித நீர் கொண்டு வந்ததாகவும், ஆனால் அதை குடிக்க தான் மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்