மாமல்லபுரத்தில் இன்று கடலில் பலத்த சீற்றம் ஏற்பட்டு கரைப்பகுதியில் 20 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் உட்புகுந்ததால் மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு தெற்கு பக்க கடற்கரை பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டது. மணற்பகுதிகள் கடல் அரிப்பால் சுவர் போல் எழும்பி நின்றன.