தமிழ்நாடு

மகா புஷ்கரம்- கடைசி நாளில் பக்தர்கள் குவிந்தனர்

மகா புஷ்கர விழாவின் இறுதி நாளான இன்று, நெல்லை தாமிரபரணி நதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

தந்தி டிவி

மகா புஷ்கர விழாவின் இறுதி நாளான இன்று, நெல்லை தாமிரபரணி நதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். 144 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா, கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. கடந்த 12 நாட்களாக தாமிரபரணி நதிக்கரையில் உள்ள 143 படித்துறைகளில் பக்தர்கள் புனித நீராடி, சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். கடைசி நாளான இன்று, மாலையில் நடைபெறும் மங்கள ஆரத்தியுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்நிலையில்,

ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்றும் காலை முதல் புனித நீராடி வருகின்றனர். இதுவரை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புனித நீராடியது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்