தமிழ்நாடு

காணாமல் போன தந்தை பிணமாக மீட்பு - அனாதை பிணம் என அடக்கம் செய்த போலீசார்

அடையாளம் தெரியாத பிணம் என்று போலீசாரால் அடக்கம் செய்யப்பட்ட , தனது தந்தையின் பிணத்தை பெற்று நல்லடக்கம் செய்ய மகன் ஒருவர் பாசப்போராட்டம் நடத்தி வருகிறார்

தந்தி டிவி

மதுரவாயலைச் சேர்ந்த பாண்டுரங்கன் தனது 69 வயது தந்தை முருகேசனை காணவில்லை என்று மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் தனது தந்தையின் புகைப்படம் மற்றும் அவரது அடையாளங்கள் குறித்து எழுதப்பட்ட துண்டு பிரசுரங்களை பல காவல் நிலையங்களில் வழங்கிய அவர் வளசரவாக்கம் காவல் நிலையம் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார்.

அங்கு அடையாளம் தெரியாத ஆண் பிணம் என்று அவரது தந்தை முருகேசன் படம் ஒட்டப்பட்டு இருந்த்து. அவர் போலீசாரை தொடர்பு கொண்ட போது, பிணத்துக்கு யாரும் உரிமை கோராததால் தாங்களே அடக்கம் செய்து விட்டதாக தெரிவித்தனர்.. தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய உடல் தனக்கு வேண்டும் என்று அவர் கேட்ட போது இனி நீதிமன்றம் உத்தரவிட்டால் தான் பிணத்தை தோண்டி எடுக்க முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்