தமிழ்நாடு

மீனாட்சியம்மன் வேடத்தில் திருநங்கை வேட்பு மனுத்தாக்கல்...

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பல்வேறு கட்சியினரும், நான்காவது நாளாக வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

தந்தி டிவி

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பல்வேறு கட்சியினரும், நான்காவது நாளாக வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். நான்காம் நாளான இன்று, திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சு.வெங்கடேசன், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பாண்டியம்மாள் ஆகியோர் மதுரை தொகுதி தேர்தல் அலுவலர் நடராஜனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதே போல், மதுரையை சேர்ந்த திருநங்கை பாரதி கண்ணம்மா மீனாட்சியம்மன் வேடத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதுவரை சி.பி.எம், நாம் தமிழர் கட்சி, திருநங்கை உள்ளிட்ட 7 வேட்பாளர்கள், தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்