தமிழ்நாடு

கோயிலை இடிக்க உத்தரவு.. இளைஞர்கள் எடுத்த முடிவு.. இறங்கிய சாமி.. பதறிய அதிகாரிகள்

தந்தி டிவி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பொது மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கோயில் இடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருமங்கலம் அருகே நீர் பிடிப்பு பகுதியில் இருப்பதாக கூறி, மருதூர் அய்யனார் கோயிலை இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன்

கோயிலை இடிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்ற போது அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இளைஞர்கள் சிலர் கையில் மண்ணெண்ணெய் பாட்டிலுடன்

கோயில் மேல் ஏறி த*கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். பெண்கள் கோயிலுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு வெளியே வர மறுத்தனர். அப்போது சில பெண்கள் சாமி வந்து ஆடினர். அனைவரையும் போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்