தென்காசியில் இருந்து சென்னை நோக்கி சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ராணுவ வீரரை தாக்கியது தொடர்பாக சம்பந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகரை ரயில்வே நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது.டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த ராணுவ வீரரிடம் அபராதம் தொடர்பாக டிக்கெட் பரிசோதகர் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.பின்னர் மதுரை ரயில் நிலையத்தில் முருகனை ரயிலில் இருந்து இறக்கிவிட்டு, காலால் எட்டி உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்த நிலையில், முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்ட ரயில்வே நிர்வாகம், சம்பந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.