தமிழ்நாடு

வகுப்பறையில் ஆசிரியை வெட்டி படுகொலை - மாணவர்கள் கண்ணெதிரே கணவன் ஆத்திரம்

மதுரை அருகே ஆசிரியை ஒருவரை வகுப்பறையில் கணவர் வெட்டிக் கொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் குருமுனீஸ்வரன். இவரது மனைவி ரதிதேவி. இவர்களுக்கு 6 வயதில் இரட்டை குழந்தைகள் உள்ளனர். பொறியாளரான குருமுனீஸ்வரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து ரதிதேவி மதுரை மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள சித்தனேந்தல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு வந்த குரு முனீஸ்வரன் தனது மனைவியை பார்க்கவேண்டும் என கூறி பள்ளிக்குள் நுழைந்துள்ளார். அங்கு சென்ற அவர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த மனைவிடம் சென்று வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரதிதேவியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரதிதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவர்கள் கண் எதிரே நடந்த இந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குரு முனீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குருமுனீஸ்வரனின் உறவினர்கள் உட்பட 7 பேர் மீது திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வகுப்பறையில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்