தமிழ்நாடு

சந்தையூர் கோயில் சுவர் தீண்டாமை சுவர் அல்ல - மதுரை ஆட்சியர் அறிக்கை தாக்கல்

மதுரை சந்தையூர் கோயிலின் சுற்றுச் சுவர் தீண்டாமை சுவர் அல்ல என மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் சந்தையூரில் உள்ள ராஜகாளியம்மன் கோயிலின் சுற்றுச் சுவர் தொடர்பாக இரண்டு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான அமர்வு, இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பேச்சு வார்த்தை அடிப்படையில், மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் வீரராகவ ராவ், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், கோயிலின் சுவர் அரசு நிலத்தில் கட்டப்பட்டு உள்ளதாகவும், அது தீண்டாமை சுவர் அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு இரு தரப்புக்கும் உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையையும் அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்