தமிழ்நாடு

ரவுடி தலையை துண்டித்து குப்பையில் வீசி சென்ற சம்பவம் : பிரபல ரவுடி உள்பட 6 பேர் கைது - தனிப்படை அதிரடி

மதுரையில் ரவுடியை வெட்டி கொலை செய்து ,தலையை துண்டித்து குப்பையில் வீசிச்சென்ற சம்பவத்தில் பிரபல ரவுடி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
மதுரை முத்துப்பட்டி பகுதியில் கடந்த 25ஆம் தேதி பிரபல ரவுடி சவுந்தர பாண்டியன் என்பவரை மர்ம கும்பல் ஒன்று வீடு புகுந்து கொடூரமாக வெட்டிக் கொன்றது. அதோடு ஆத்திரம் அடங்காத அந்த கும்பல், சவுந்தரபாண்டியன் தலையை துண்டித்து, குப்பையில் வீசி சென்றது. மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக , போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பிள்ளையார் கணேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் ராம்குமார், தமிழ்ச்செல்வன், முகமது, மனோஜ், உமா மகேஷ்வரன் ஆகியோர் போலீசார் வசம் சிக்கியுள்ளனர். அவர்களை கைது செய்த தனிப்படை போலீசார், சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்