தமிழ்நாடு

மதுரையை அதிர்ச்சியாக்கிய சைக்கோ சுள்ளான் கும்பல் பிடிபட்டது.. பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

மதுரை சிந்தாமணி பகுதியில் மது போதையில், கண்ணில் பட்ட வாகனங்களை ஆயுதங்களால் தாக்கி சேதப்படுத்திய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை சிந்தாமணியில் உள்ள தெருக்களில் நள்ளிரவில் சுற்றித் திரிந்த மர்ம நபர்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், ஷேர் ஆட்டோ, மினி வேன், கார் என கண்ணில் பட்ட வாகனங்களை எல்லாம் ஆயுதங்களால் உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் வந்த கீரைத்துறை காவல் நிலைய போலீசார், CCTV காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன்படி, தாக்குதலில் ஈடுபட்ட சக்திவேல், உமா மகேஸ்வரன் மற்றும் அவர்களது நண்பர்களான 3 சிறார்கள் என 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மது போதையில், வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்டனர். கைதான 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

``தேமுதிகவுக்கு மட்டும் எப்படி அதிக சீட் தர முடியுது..’’ - ஓபனாகவே கேட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்

Breaking | TN Election | "கூடுதலாக கேட்டோம்.. ஆனா திமுக சொன்னது..'' | உடைத்து பேசிய CPI வீரபாண்டியன்

Today Gold Rate | கீழே விழுந்தது தங்கம் விலை

Petrol ``தமிழகத்தில் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்கிலும்’’ - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முக்கிய முடிவு

LPG | ``முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்’’ - நெருக்கடி நேரத்தில் முக்கிய முடிவெடுக்கும் முதல்வர்