தமிழ்நாடு

தேர்தல் பறக்கும் படை அதிகாரி என கூறி மோசடி - 4 பேர் கொண்ட மர்மகும்பலுக்கு போலீஸ் வலை

மதுரையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி எனக் கூறி, நிதி நிறுவன ஊழியர்களிடம் சுமார் 20 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து சென்ற 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தந்தி டிவி
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்களான சரவண குமார், ஆனந்தன் ஆகியோர், மதுரையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு 20 லட்சம் ரூபாய் பணத்துடன் பேருந்தில் சென்றுள்ளனர். மதுரை வரிச்சியூர் பகுதியில், அந்த பேருந்தை, 'தேர்தல் அவசரம்' என்ற ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்த 4 பேர் வழி மறித்துள்ளனர். பேருந்துக்குள் ஏறி, நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் யார் என கேட்டு, சரவணக் குமார் மற்றும் ஆனந்தனை காரில் அழைத்துச் சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்றதும் அவர்களை இறக்கி விட்டு, பணத்துடன் அந்த கும்பல் தப்பி விட்டது.இது தொடர்பாக, கருப்பாயூரணி போலீசில் நிதி நிறுவன ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் ஊமச்சிகுளம் டிஎஸ்பி நல்லு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு