தமிழ்நாடு

தாயை தட்டுவண்டியில் சிகிச்சைக்கு அழைத்துவந்த மகன் : மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக புகார்

மதுரையில் தட்டுவண்டியில் தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்த மகனால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
மதுரை இஸ்மாயில்புரத்தை சேர்ந்த அலாவுதீன் என்பவர் தனது தாயை தட்டுவண்டியில் வைத்து ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார். இந்த பரபரப்பான சம்பவம் குறித்து தெரிவித்த அவர், எதற்கெடுத்தாலும் மருத்துவமனையில் லஞ்சம் கேட்பதாக வேதனை தெரிவித்தார். ஸ்டெச்சர், சக்கர நாற்காலி ஆகியவற்றில் வைத்து தள்ள 500 ரூபாய் வரை ல​ஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டிய அவர், தன்னிடம் பணம் இல்லாததால் தட்டுவண்டியில் தாயை அழைத்து வந்ததாக கூறினார். வட மாநிலங்களில் மட்டுமே நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள், தமிழகத்திலும் அரங்கேறியது அங்கு இருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்