தமிழ்நாடு

Madurai | மதுரை அருகே தனியார் குவாரிக்கு எதிராக போராடியவர்கள் மீது நடுரோட்டில் பயங்கர தாக்குதல்

Madurai | மதுரை அருகே தனியார் குவாரிக்கு எதிராக போராடியவர்கள் மீது நடுரோட்டில் பயங்கர தாக்குதல்

thanthitv

Madurai | மதுரை அருகே தனியார் குவாரிக்கு எதிராக போராடியவர்கள் மீது நடுரோட்டில் பயங்கர தாக்குதல் மதுரை மாவட்டம், கீழவளவு அருகே தனியார் கிரசர் குவாரிக்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... குவாரியால் பொதுமக்களும், இயற்கை வளங்களும் பாதிக்கப்படுவதாக கூறி, குவாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். அப்போது, குவாரியில் இருந்தவர்கள் போராட்டக்காரர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், வழக்கறிஞர் உட்பட 3 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கீழவளவு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

Karur | CM Vijay | கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை.. தமிழக அரசு விளக்கம்

CM Vijay | Law and Order | சட்டம் ஒழுங்கு - CM விஜய் அதிரடி

Uttar Pradesh | சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த கொடூர ஆசிரியை.. கதறும் பெற்றோர்

Police Arrest | சென்னை முழுக்க சல்லடை போட்டு - 92 பேரை தூக்கிய போலீஸ்

Jananayagan | 'ஜனநாயகன்' படம் திடீர் நிறுத்தம்சென்னையில் பரபரப்பு