தமிழ்நாடு

மதுரையில் 3வது நாளாக போராட்டம்.. வேடம் அணிந்து வந்த மக்கள்

தந்தி டிவி

மதுரை மாவட்டம் பரவை அருகே, சாதிச் சான்றிதழ் கோரி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், பெற்றோர்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரவை அருகே சத்தியமூர்த்தி நகரில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் படிக்கும் இவர்களது குழந்தைகளுக்கு, இந்து காட்டுநாயக்கன் எனும் பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் கடந்த ஆண்டு வரை பெற்று வந்தனர். இந்நிலையில், தற்போது பல்வேறு காரணங்களை கூறி மாவட்ட நிர்வாகம் சான்றிதழ் தர மறுப்பதாக கூறப்படுகிறது.

இதனால் தங்கள் குழந்தைகளுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். போலீசார் மற்றும் வருவாய் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், மூன்றாவது நாளாக தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், ஆதிவாசி வேடம் அணிவித்து,

காட்டுக்கே செல்லப்போவதாகக்கூறி, பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்