தமிழ்நாடு

தமிழன்னை சிலை முன்பு திடீர் போராட்டம் - பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கைது

மதுரையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி

மதுரையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு உதயமான நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மதுரை தமுக்கம் பகுதியில் உள்ள தமிழன்னை சிலைக்கு, பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு, தமிழன்னை சிலை முன்பு அமர்ந்த அவர்கள், நீட் தேர்வு ரத்து, ஏழு தமிழர் விடுதலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்