மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயிலில் வரும் பிப்ரவரி மாதம் தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் வறண்டு கிடந்த கோயில் தெப்பக்குளம் நீர் நிறைந்து காணப்படுவதால் பொதுமக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டு தோறும் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு அதன் மூலம் தெப்பக்குளத்தில் நீர் நிரப்பப்படும். தைப்பூச திருநாளில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்ப குளத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.