தமிழ்நாடு

பெரியார் பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் - ஒப்பந்த அறிவிப்புக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்த, ஜூலை 7ஆம் தேதி வெளியிட்ட ஒப்பந்த அறிவிப்புக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது.

தந்தி டிவி

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்த, ஜூலை 7ஆம் தேதி வெளியிட்ட ஒப்பந்த அறிவிப்புக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது. ஒப்பந்தத்தில் பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து எதுவும் கூறப்படவில்லை என்றும், ஒப்பந்தத்தை ரத்துச் செய்யக்கோரியும் மதுரை பாரதியார் வணிக வளாக சங்க செயலாளர் கருப்பாண்டி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, தாரணி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தனர். கடைகளை காலி செய்யுமாறு மாநகராட்சி சார்பில் வழங்கிய நோட்டீசிற்கு விதித்த இடைக்கால தடையையும் நீட்டித்து உத்தரவிட்டனர்.

BREAKING || ஏன் இந்த முடிவு? கம்யூ. தலைவர்கள் நேரடியாக சொன்ன வார்த்தை

TVK Vijay | CMO Tamilnadu | "பதவியேற்பு...".. "இன்று இரவுக்குள்..." - உறுதியாகிறதா Headline?

BREAKING || Vijay | TVK | "விஜய்க்கு நாங்களும் நிபந்தனையற்ற ஆதரவு" - வந்தது அடுத்த கிரீன் சிக்னல்

BIG BREAKING || VIJAY | TVK | VCK | விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார் திருமா

Breaking | TVK Vijay | விஜய் கைக்கு சென்ற ஆதரவு கடிதம் - "சர்ப்ரைஸ்... ஒரு நம்பர் அதிகமா..."