இது தொடர்பாக மேலூரை சேர்ந்த சரவணன், பரமக்குடியை சேர்ந்த நவீன் சக்தி, ராஜசேகர், தர்மா ஆகிய 4 பேரிடம் சுமார் 9 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
அதில், சரவணன் என்பவர் மேலூரில் வெளிநாட்டு பணத்தை மாற்றும் நிறுவனம் நடத்தி வருவதும், அங்கிருந்து பழைய ரூபாய் நோட்டுகள் கொண்டுசெல்லப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, 1 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை கைப்பற்றிய அதிகாரிகள், காரை பறிமுதல் செய்ததுடன் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.