மதுரையில் கூலிப்படையை ஏவி தொழில் அதிபரை கொலை செய்த கூட்டாளியை போலீசார் கைது செய்தனர். மதுரையை சேரந்த தொழிலதிபர் ராஜ்குமாரை படுகொலை செய்ததாக 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ராஜ்குமாரின் தொழில் கூட்டாளியான கல்லாணை, தனது மகனை மற்றொரு பார்ட்னராக தொழில் சேர்க்க ராஜ்குமார் மறுத்ததால், அவரை கூலிப்படையை வைத்து தீர்த்துக் கட்டியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கல்லாணையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.