தமிழ்நாடு

"மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம் கோயில் வலைதளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு" - கோவில் இணை ஆணையர் தகவல்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா நடைபெறாது என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

தந்தி டிவி

ஊரடங்கு காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற இருந்த சித்திரை திருவிழாவும், தேரோட்டமும் நடைபெறாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் தினந்தோறும் நடைபெறும் என்றும், மே 4ம் தேதியன்று காலை 9 .05 மணி முதல் 9.29 மணிக்குள், நான்கு சிவாச்சாரியர்கள் மட்டும் உரிய பாதுகாப்புடன் திருக்கல்யாண சம்பிரதாயங்களை நடத்துவார்கள் என்றும் இந்த நிகழ்வினை கோவில் இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில், புதிய திருமாங்கல்யம் அணிய விரும்பும் பெண்கள், குறிப்பிட்ட நேரத்தில் வீட்டிலிருந்தே பிரார்தித்துக்கொள்ளலாம் என கோவில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்