மதுரையில் காதலியின் புகைப்படங்களை வைத்து மிரட்டிய கல்லூரி மாணவரை கடத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டனர். நாகர்கோவிலை சேர்ந்த கோகுல் மதுரையில் கல்லூரியில் படித்தபோது தன்னுடன் பயின்ற மாணவியை காதலித்து வந்தார். இந்த நிலையில் இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவதாக கோகுல் மிரட்டியதால், அவரை காதலியின் நண்பர்கள் காரில் கடத்தினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து, கோகுலை கடத்திய கார்த்திக், முகேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.