உயர்நீதிமன்ற உத்தரவுபடி மதுரை கே.கேநகர் பகுதியில் உள்ள பெரியார் தோரண நுழைவு வாயில் பலத்த பாதுகாப்புடன் இரவில் இடித்து அகற்றப்பட்டது. அந்த காட்சிகளை பார்க்கலாம்... 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற 5வது உலக தமிழ் மாநாட்டையொட்டி மதுரை மாநகருடைய நுழைவாயில் பகுதிகளான மாட்டுத்தாவணி, கே.கே.நகர், வில்லாபுரம், பசுமலை ஆகிய பகுதிகளில் தோரண நுழைவாயில்கள் கட்டபட்டன. தற்போது மதுரை மாநகரின் சாலைகள் விரிவடைந்துள்ளதால், கே.கே நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த நுழைவாயிலை இடிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து, கே.கே நகரில் இருந்த பெரியார் தோரண நுழைவாயில் பொக்லைன் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் இடித்து அகற்றப்பட்டது.