மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினர்களாக உள்ள 3 பேராசிரியர்கள் செயல்பட உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.
மதுரையை சேர்ந்த லியோனல் அந்தோணி ராஜ் உயர்நீதி மன்ற மதுரை கிளை மனு தாக்கல் செய்தார். அதில்
மதுரை காமராஜர் பல்கலை கழக துணை வேந்தராக செல்லத்துரை இருந்த காலத்தில் இணைப் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாகவும், இதில் பலர் தகுதி அற்றவர் என்றும் குறிப்பிட பட்டுள்ளது.ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி விசாரணை செய்து, முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்தது என்றும், ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, உத்தரவு பிறப்பித்த பின்னரும் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என கேள்வி எழுப்பினர். மேலும் காமராஜர் பல்கலை கழக சிண்டிகேட் உறுப்பினர்களாக உள்ள பேராசிரியர்கள் சுதா, தங்கராஜ், நாகரத்தினம் ஆகிய மூவரும் செயல்பட தடை விதித்த நீதிபதிகள், வழக்கை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.