தமிழ்நாடு

"அதிகாரிகள் யாரும் தப்ப முடியாது.. அனைவர் மீதும் நடவடிக்கை.." கோர்ட் பரபரப்பு உத்தரவு

தந்தி டிவி

மேலூர் - காரைக்குடி நான்கு வழி சாலை பணிக்காக விடப்பட்ட மணல் குவாரியில் விதி மீறி மணல் அள்ளப்பட்டதாக மதுரை மாவட்ட ஆட்சியர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்தார். அதனை படித்துப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், அந்த பகுதி வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் முறைகேடு எப்படி நடக்கும் என கேள்வி எழுப்பினார். இந்த குற்ற செயலில் ஈடுபட்ட அனைவர் மீதும் காவல்துறையினர் குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் மதுரை ஆட்சியர் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Chennai | Rain | Lady | மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

Delta Sand Quarry | ``இனி மணல் குவாரிகளுக்கு அனுமதி கூடாது’’ - ஒரே போடாக போட்ட மதுரை ஐகோர்ட்

TN By Election | "இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை" - தேர்தல் ஆணைய பதில் மனுவால் பரபரப்பு

MK Stalin vs CM Vijay | ``தவறான முடிவு.. பேரிடி.. அவர்களுக்கு அடித்த ஜாக்பாட்’’- கொதிக்கும் ஸ்டாலின்

Annamalai | CM Vijay | பரந்தூர் ஏர்போர்ட்டை கைவிட்ட CM விஜய் - அண்ணாமலை எடுத்த நிலைப்பாடு