தமிழ்நாடு

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் எத்தனை? - அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

தமிழகத்தில், இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் எத்தனை என, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தந்தி டிவி
தமிழகத்தில், இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் எத்தனை என, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மணப்பாறை வழக்கறிஞர் சங்க செயலர் செல்வராஜ் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் மதுவுக்கு அடிமையானவர்கள் தமிழகத்தில் அதிகம் என்பதால், டாஸ்மாக் நிர்வாக இயக்குநரை எதிர்மனுதாரராக சேர்ப்பதாக உத்தரவிட்டனர். மேலும், அடுத்தகட்டமாக எத்தனை டாஸ்மாக் கடைகள், எப்போது மூடப்படவுள்ளன? என்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்