தமிழ்நாடு

மதுரையில் டோர் டெலிவரி மூலம் கஞ்சா விற்பனை

மதுரை புறநகர் பகுதிகளில் டோர் டெலிவரி முறையில் கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
கூடல்நகர், பாசிங்காபுரம், அலங்காநல்லூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொண்டு தொலைபேசியில் வாடிக்கையாளர் போல் பேசிய போலீசார் கஞ்சா வேண்டும் என்று கேட்டுள்ளனர். பாசிங்கபுரம் பேருந்து நிலையம் அருகே கஞ்சாவை பெற்றுக் கொள்ளுமாறு எதிர்முனையில் பேசியவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் கஞ்சாவை வழங்க வந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாசிங்காபுரம் பகுதியை சேர்ந்த மரகதவேல் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து செய்ததுடன், அவரிடம் இருந்து இருசக்கர வாகனம், 100 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்