தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் விவசாயிக்கு மத்திய அரசின் விருது : உளுந்து உற்பத்தியில் விவசாயி சாதனை

உளுந்து உற்பத்தியில் சாதனை புரிந்த திருச்சியை சேர்ந்த விவசாயி ஒருவர் மத்திய அரசின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி சிறுகமணி எஸ். புதுக்கோட்டையை சேர்ந்தவர் சரவணன். தாவரவியல் பட்டதாரியான இவர், விவசாயம் செய்து வருகிறார். சாகுபடியில் பல்வேறு புதிய யுக்திகளை பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்ட சரவணன், தனது வயலில் வம்பன் 8 என்ற உளுந்து ரகத்தை பயிரிட்டார். நவீன தொழில்நுட்பங்கள் மூலம் விதைப்பு, உரமிடல், களையெடுப்பு உள்ளிட்ட பணிகளை செய்த அவருக்கு 835 கிலோ உளுந்து கிடைத்தது. இரு மடங்கு உற்பத்தி செய்து சாதனை படைத்த சரவணன், மத்திய அரசின் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரும் ஜனவரி 6ஆம் தேதி பெங்களூருவில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி கையால் அவர் விருது பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி