தமிழ்நாடு

"மதுரையில் தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்துவோம், ஒத்திவைக்க முடியாது" - இந்திய தேர்தல் ஆணையம்

மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற இயலாது என மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியதை அடுத்து, ஆலோசனை கூட்டத்தில் இருந்து அனைத்து கட்சி பிரதிநிதிகளும் வெளிநடப்பு செய்தனர்.

தந்தி டிவி

ஏப்ரல் 18ஆம் தேதி மதுரையில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் நடக்கிறது. இதனால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் தலைமையில், அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அனைவரும், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் எனவும், அன்று தேர்தல் நடந்தால் வாக்கு சதவீதம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த நடராஜன், தேர்தல் தேதியை மாற்ற இயலாது என்றும், வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி