தமிழ்நாடு

நாளை முதல் போராட்டம்...வழக்கறிஞர் கூட்டமைப்பினர் அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி

இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை முதல் 19-ம் தேதி வரை பணி புறக்கணிப்பில் ஈடுபட போவதாக, வழக்கறிஞர் ஜாக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளர்.

தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு ஜாக் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார், மாவட்ட விசாரணை நீதிமன்றங்களில் இ- பைலிங் முறையை ஏப்ரல் 1 தேதி முதல் நீதித்துறை அமல்படுத்தி உள்ளதாக கூறினார். ஆனால் இ ஃபைலிங் செய்வதற்கு கீழமை விசாரணை நீதிமன்றங்களில் எந்த கட்டமைப்பு வசதியும் செய்து தரவில்லை என்றும், இதனால் வழக்கு தாக்கல் செய்வதில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக கூறினார். இந்த சிக்கல் தீரும் வரை இ ஃபைலிங் முறையை நிறுத்தி வைக்ககோரி, நாளை முதல் 19-ம் தேதி வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்