மதுரையில் ஊரடங்கில் முககவசம் அணியாமல் வெளியே சுற்றிய 25 ஆயிரத்து 823 நபர்களிடம் 33 லட்சத்து 43 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. முக கவசம் அணியாதவர்களிடமிருந்து காவல்துறையினர் 500 ரூபாயும், மாவட்ட நிர்வாகம் 200 ரூபாயும் அபராதம் வசூலித்து வருகின்றனர்.மதுரையில், ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் 495 நபர்களிடம் 99 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்றை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் வினய் கேட்டுக்கொண்டுள்ளார்.