தமிழ்நாடு

அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் - செயற்கை வைகை ஆற்றில் இறங்கிய அழகர்

மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கு நிகழ்விற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை கோவில் வளாகத்திலேயே அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது.

தந்தி டிவி
கொரோனா காரணமாக மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கு நிகழ்விற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை கோவில் வளாகத்திலேயே அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. அதற்காக அழகர் கோவில் வளாகத்திலேயே, வைகை ஆற்றைப் போன்று செயற்கையாக வடிவமைக்கப்பட்ட இடத்தில், கள்ளழகர் இறங்கினார். இந்நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த பக்தர்கள் கொரோனா காரணமாக இந்த முறை கோவில் வழக்கமான கூட்டம் இன்றி காணப்பட்டதாகக் கூறினர். மேலும், 2 ஆண்டுகளாக அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வைக் காணாதது வருத்தம்தான் என்றும், அடுத்த ஆண்டாவது அழகர் குதிரையில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்குவார் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்