தமிழ்நாடு

மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை

மதுரை மத்திய சிறையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை நடத்தியது தெரியவந்தது. இ​தைத்தொடர்ந்து கைதிகள் 4 பேரும், அவர்களுக்கு உதவிய சிறை வார்டன்கள் 8 பேரும் அதிரடியாக மாற்றப்பட்டனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு மத்திய சிறைகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் வெற்றிச்செல்வன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள மத்திய சிறையில் காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சிறை வளாகம், கைதிகள் அறை, சமையலறை, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சிறையில் உள்ள கைதிகளிடம் இருந்து பிளேடு மற்றும் இரும்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்