Madurai | Canada | Marriage | கனடா பொண்ணு.. மதுரை மாப்ள.. ஜோராக டும்.. டும்.. டும்.. மதுரை மருமகளான கனடா இளம்பெண்... கனடா நாட்டு இளம்பெண் மதுரை மருமகளாகியுள்ளார்... மதுரையைச் சேர்ந்த தாமரைச்செல்வன், கனடாவைச் சேர்ந்த மழலையர் பள்ளி ஆசிரியர் கெல்சி கோக்ரனை இருவீட்டாரின் ஒப்புதலுடன் திருமணம் செய்துகொண்டார்... பொறியியல் பட்டதாரியான தாமரைச்செல்வன் கனடாவில் உள்ள பிரபல நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்... கெல்சி கோக்ரன் அங்கு ஆசிரியையாக பணிபுரிகிறார். 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமணம், மதுரை பசுமலையில் தமிழர் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.... உற்றார் உறவினர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்...